சென்னையில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட 200 குழுக்கள்; மாநகராட்சி தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதார துறை சார்பாக டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகரம் முழுவதிலும் உள்ள 200 கோட்டங்களில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட 200 குழுக்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பணியில் 2,562 மலேரியா பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களை கொண்டு 1,22,320 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 582 வீடுகளில் உள்ள கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டன. பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் சம்பந்தமாக விழிப்புணர்வு எற்படுத்துவதற்காக 152 இடங்களில் கொசுப்புழுக்கள் உருவாகும் விதங்கள், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து கண்காட்சி அமைத்து விளக்கப்பட்டது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.