சென்னையில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
சென்னையில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
சென்னை,
அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களாக அண்ணாநகருக்கு தனலட்சுமியும், தாம்பரத்துக்கு கீதாவும் நியமிக்கப்பட்டனர்.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களாக தேனாம்பேட்டைக்கு விஜயகுமார், அரும்பாக்கத்துக்கு ரவிகுமார், கோடம்பாக்கத்துக்கு பாலசுப்பிரமணியன், அமைந்தகரைக்கு ராஜன், ஜாம்பஜாருக்கு நசீமா ஆகியோர் பொறுப்பு ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.