சசிகலாவை எந்த அமைச்சரும் தொடர்பு கொள்ளவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலாவை எந்த அமைச்சரும் தொடர்பு கொள்ளவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2017-10-11 07:16 GMT
சென்னை

 உடல் நலக்குறைவால்  ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நட ராஜனை பார்ப்பதற்காகவே சசிகலாவுக்கு பரோல்  வழங்கப்பட்டது.  234 நாட்கள் சிறை வாசத்துக்கு பின்னர் கடந்த 5- ந்தேதி  பரோலில் சசிகலா  வந்தார்.

பரோலில் வந்த  சசிகலாவுடன் 8 அமைச்சர்களும்  பல எம்.எல் ஏக்களும் 
தொடர் பு கொண்டு பேசியதாக கூறப்பட்டது.

இது குறித்து  அமைச்சர் ஜெயக்குமார்  கூறியதாவது:-

சசிகலாவை அமைச்சர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக வந்த தகவல் தவறு; அவரை தொடர்பு கொள்ளும் எண்ணம் யாருக்கும் இல்லை . குட்கா விவகாரத்தில் முகாந்திரம் உள்ள 17 பேர் மீது தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஊழலில் திளைத்த கட்சி திமுக அரசை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. டெங்குவை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஸ்டாலினின் குற்றசாட்டை ஏற்க முடியாது. டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். தமிழக அரசோடு பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால், டெங்கு இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம்.

மேலும் செய்திகள்