நின்ற லாரி மீது கார் மோதல்; சென்னையை சேர்ந்த 6 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 6 பேர் இறந்தனர்.
உளுந்தூர்பேட்டை,
துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58). வங்கி மேலாளர். இவருடைய மனைவி உமா (56), ஓய்வு பெற்ற ஆசிரியை.
சேலத்தில் உள்ள வெங்கடேசனின் மாமியார் சாவித்திரி நேற்று முன்தினம் இறந்தார். இதற்காக வெங்கடேசன், உமா, அம்பத்தூரை சேர்ந்த உமாவின் அக்காள் சுகுணா (60), அவரது கணவர் ரமேஷ் (66), உமாவின் சித்தி லட்சுமி (77), உறவினர் நங்கநல்லூரை சேர்ந்த அனுசுயா (28) ஆகியோர் சென்னையில் இருந்து காரில் நேற்று முன்தினம் இரவு சேலத்துக்கு புறப்பட்டனர். காரை வடபழனியை சேர்ந்த பிரசாந்த் (22) ஓட்டினார்.
உளுந்தூர்பேட்டை அருகே கார் நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. பாதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் டிரைவர் பிரசாந்த், வெங்கடேசன், ரமேஷ், சுகுணா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே உமா, லட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அனுசுயா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்த திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
துக்க நிகழ்ச்சிக்காக சென்ற போது 6 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.