‘ஸ்லீப்பர்செல்’ வெளி வர தொடங்கி விட்டார்கள்; செல்லூர் ராஜூ பேட்டி குறித்து சி.ஆர்.சரஸ்வதி கருத்து

அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவருடைய இல்லத்தில் அவரது ஆதரவாளரான நடிகை சி.ஆர்.சரஸ்வதி நேற்று சந்தித்து பேசினார்.

Update: 2017-10-08 23:15 GMT

சென்னை,

சி.ஆர்.சரஸ்வதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அமைச்சர் செல்லூர்ராஜூ மிக தெளிவாக ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். எனக்கும் மனசாட்சி இருக்கிறது. என் மனசுக்குள்ளும் சில வி‌ஷயங்கள் இருக்கிறது. ஆனால் பேச முடியாத நிலைமையில் இருக்கிறேன். இந்த அரசு (அ.தி.மு.க. ஆட்சி) உருவாவதற்கு சசிகலா தான் காரணம். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று அமைச்சர் செல்லூர்ராஜூ மிக தெளிவாக சொல்லி இருக்கிறார். அதை தான் நாங்கள் சொன்னோம், அங்கு (எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணி) இருக்கிற ஸ்லீப்பர்செல் ஒவ்வொருவராக வராங்க.

இந்த அரசை அவங்க (சசிகலா) தானே ஏற்படுத்திட்டு போனாங்க என்ற எண்ணம் வரும் இல்லையா? அதன் வெளிப்பாடு இப்ப வர தொடங்கி உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின்போது விஜிலா சந்தியானந்த் எம்.பி. உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்