நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் பொருத்தப்பட்டது
நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை 14 மணி நேரத்தில் வெற்றிகரமாக நடந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னை,
அ.தி.மு.க. அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவரும், ‘புதிய பார்வை’ ஆசிரியருமான ம.நடராஜன் (வயது 74), கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 10-ந் தேதி திடீரென்று அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரபல கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா தலைமையிலான டாக்டர் குழுவினர் நடராஜனை பரிசோதித்தனர். அவருக்கு கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு மாற்று கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, கூத்தாடிவயலை சேர்ந்த கார்த்திக் (22) என்பவரின் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதனால் அவருடைய உடல் சென்னைக்கு தனி விமானத்தில் கொண்டுவரப்பட்டது.
அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை டாக்டர்கள் நடராஜனுக்கு பொருத்த முன்வந்தனர். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு அறுவை சிகிச்சையை தொடங்கினர். தொடர்ந்து 14 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து நேற்று மாலை 4 மணி அளவில் மாற்று உறுப்புகள் பொருத்தப்பட்டன.
நடராஜனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழுவினர் கூறியதாவது:-
நடராஜன் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கல்லீரல், சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்ததை தொடர்ந்து தானமாக பெறப்பட்ட கல்லீரலையும், சிறுநீரகத்தையும் 14 மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெற்றிகரமாக பொருத்தி உள்ளோம்.
தீவிர கல்லீரல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை 2 நாட்களுக்கு பிறகு குடும்ப உறுப்பினர்கள் மட்டும் 5 நிமிடம் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். அதுவரை அவர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார்.
இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்.
பொதுவாக உறுப்பு தானம் செய்பவர்களின் உறுப்புகளை மட்டும் தான் எடுத்துவந்து தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்துவது வழக்கம். ஆனால் நடராஜனுக்கு உறுப்பு தானம் அளிப்பவரின் உடலையே எடுத்து வந்து விதிகளுக்கு புறம்பாக உறுப்புகளை தானம் பெற்றதாக பரவலாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து குளோபல் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 30-ந் தேதி கார்த்திக் என்ற இளைஞர் தலைக்காயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருடைய பெற்றோருக்கு நோயாளியின் நிலை குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கினார்கள். ஆனால் அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு கார்த்திக்கை அழைத்துச் செல்ல முடிவு செய்து எங்கள் மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர்.
அவருக்கு தலைக்காயத்துடன், எலும்பு முறிவு உள்பட வேறு பல காயங்களும் ஏற்பட்டு இருந்தன. தொடர்ந்து அவருக்கு நரம்பியல் நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனிளிக்காததால் அவர் 3-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார்.
அவரது குடும்பத்தினரிடம் கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை தானமாக அளிக்கலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினர்.
அதன்படி அவர்களுடைய குடும்பத்தினரும், கார்த்திக் இறந்துவிட்டாலும் அவருடைய உறுப்புகளை தானமாக பிறருக்கு வழங்குவதன் மூலம் அவர் உயிர்வாழ்வதாகவே நாங்கள் கருதுகிறோம். எனவே கார்த்திக்கின் கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை தானமாக அளிப்பதற்கு சம்மதித்தனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அரசு விதிகளின்படி கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் ஆகியவை குளோபல் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டது.
அதில் 43 வயதான தமிழகத்தைச் சேர்ந்த ஆண் நோயாளிக்கு இதயம், 62 வயதான உத்தரபிரதேச ஆண் நோயாளிக்கு நுரையீரல், 74 வயதான ஆண் நோயாளிக்கு (ம.நடராஜன்) கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
அனைத்து நோயாளிகளுக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.