தமிழக மக்கள் அன்போடும், பாசத்தோடும் இருந்தார்கள் கவர்னர் வித்யாசாகர் ராவ்

தமிழக மக்கள் அன்போடும், பாசத்தோடும் இருந்தார்கள் என (பொறுப்பு )கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறியுள்ளார்.

Update: 2017-10-04 14:57 GMT
சென்னை,

நாளை பிரிவு உபசார விழா நடைபெறுவதையொட்டி வித்யாசாகர் ராவ் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்கள் அன்போடும், பாசத்தோடும் இருந்தார்கள். தமிழக மக்கள் என் மீது கொண்டுள்ள அன்புக்கு நன்றி. ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டு பிரச்சனை, வர்தா புயல் போன்ற தருணங்களில், தமிழக மக்கள் மிகவும் அமைதியாகவும், ஒழுக்கத்துடனும் நடந்துகொண்டார்கள். பல்கலை. துணை வேந்தர்கள் நியமனத்திற்கு கமிட்டிகள் அமைத்தது, உயர் கல்வித்தரத்தை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறித்து குறிப்பிட்டுள்ளார்.   முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும்  நன்றி.  மகிழ்ச்சி, அமைதி, வளர்ச்சியுடன் தமிழக மக்கள் செழித்தோங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்