எத்தனை ஆவணங்கள் சமர்பித்தாலும் கட்சியும், சின்னமும் எங்களுக்குத்தான் - அமைச்சர் ஜெயக்குமார்

டிடிவி தினகரன் தரப்பு எத்தனை ஆவணங்கள் சமர்பித்தாலும், கட்சியும் சின்னமும் எங்களுக்குத்தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறிஉள்ளார்.

Update: 2017-10-04 04:42 GMT


சென்னை,

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக வரும் 6-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

எடப்பாடி பழனிசாமி–ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஒன்றாக இணைந்து இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோருகிறார்கள். இதேபோல் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோருகிறார்கள். இருதரப்பும் தங்கள் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்து உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி டிடிவி தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளது. இம்மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தினகரன் தரப்பு கூடுதல் ஆவணங்கள் வழங்கினாலும் கட்சியும், சின்னமும் எங்களுக்கு தான் கிடைக்கும் என கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்