எச்.ராஜா தந்தை மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா மரணம் அடைந்ததை தொடர்ந்து, எச்.ராஜாவுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2017-10-01 17:46 GMT
சென்னை,

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா மரணம் அடைந்ததை தொடர்ந்து, எச்.ராஜாவுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தங்களின் அன்பு தந்தை ஹரிஹர சர்மா உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் துயரம் அடைந்தேன். இந்த சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், ஹரிஹர சர்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஹரிஹர சர்மாவை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்