போக்குவரத்து ஊழியர்கள் செப். 24 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு

போக்குவரத்து ஊழியர்கள் செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Update: 2017-09-09 10:58 GMT
சென்னை,

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிகைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வரும் 24 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். வேலை நிறுத்தம் தொடர்பான நோட்டீஸை போக்குவரத்து துறை செயலாளருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்