பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் என்ன தவறு? ராஜேந்திர பாலாஜி கேள்வி
பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் என்ன தவறு? என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பிஉள்ளார்.
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. தலைவர்கள் பேசுவதாக தகவல் இருக்கிறதா? என்று எனக்கு தெரியாது.
பாரதீய ஜனதாவுடன் சேர்ந்தாலும் அது ஒன்றும் பெரிய தவறு கிடையாது. பிரதமர் மோடி இன்றைக்கு நாட்டை வல்லரசாக்க கடுமையாக போராடி கொண்டு இருக்கிறார். அவரை ஏன் நாம் குறுகிய மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும். அவர் எதுவும் தவறு செய்யவில்லையே.
நாங்கள்(அ.தி.மு.க.) ஏற்கனவே பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 2 முறை பாராளுமன்ற தேர்தலை சந்தித்து இருக்கிறோம். பாரதீய ஜனதா ஆட்சியில் நாங்களும் இடம் பெற்று இருக்கிறோம். தி.மு.க.வும் இடம் பெற்று இருக்கிறது.
எல்லோரும் இடம் பெற்று பாரதீய ஜனதா மந்திரி சபையில் மந்திரியாக இருந்து இருக்கிறார்கள். நாங்கள் யாரோடு இணைந்தாலும் வெற்றி எங்களுக்கு தான். உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் முடிவு எடுப்பார்கள் என்றார்.