நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்-டிடிவி தினகரன்

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

Update: 2017-09-08 11:14 GMT
சென்னை

டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆளுநர் விரைவில் நல்ல முடிவெடுப்பதாக கூறியுள்ளார் . அரசுக்கு பெரும்பான்மை இல்லை. முதலமைச்சர் பழனிசாமியை நீக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள போராட்டத்தை நடத்துவது குறித்து சட்ட வல்லுனரகளுடன் ஆலோசித்து  பிறகு முடிவு எடுக்கப்படும்.முதலமைச்சர் கூட்டியுள்ள பொதுக்குழுவில் கலந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் கூட்டுவது போலி பொதுக்குழு.

ஜக்கையனிடம் மனமாற்றம் ஏற்பட்டது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். பாதாளம் வரை எது பாயுமோ அது ஜக்கையன் மீது பாய்ந்து இருக்கலாம். ஜக்கையன் எனது நல்ல நண்பர் அவர் குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

135 எம்எல்ஏக்கள் ஆதரவு அரசுக்கு இருப்பதாக ஜெயக்குமார் சொல்வது தவறு; அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர்கள் யாரும் செல்ல முடியவில்லை . பெரும்பான்மை இல்லாத முதலமைச்சரை நீக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து எம்.எல்.ஏக்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். ஆளுநர் விரைவில் நல்ல முடிவெடுப்பதாக கூறியுள்ளார் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்