பத்திரிகையாளர் சுட்டுக்கொலை: நடிகர் கமல்ஹாசன் கண்டனம்

சென்னை,
கன்னட மூத்த பத்திரிகையாளர் கவுரி லிங்கேஷ், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு அரசியல் கட்சிகளும் பத்திரிகையாளர்கள் சங்கங்களும் கண்டனம் தெரிவித்து உள்ளன. நடிகர் கமல்ஹாசனும் கவுரி லிங்கேஷ் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–
‘‘துப்பாக்கியால் ஒரு குரலை மவுனமாக்கி விட்டு விவாதத்தை வெல்ல முனைவதை விட மோசமான வெற்றி எதுவும் கிடையாது. கவுரி லிங்கேஷ் மறைவால் வருந்திக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’’
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜும் கவுரி லிங்கேஷ் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். கவுரி லிங்கேஷ் உடலுக்கு நேரில் சென்று அவர் அஞ்சலி செலுத்தினார்.