ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் எப்போது? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் எப்போது என்று இருவரது ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
சென்னை,
ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் எப்போது என்று இருவரது ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். கட்சி தொடங்கும் நடவடிக்கைகளில் ரகசியமாக அவர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் கடந்த கால அரசியல் களம் சினிமா துறையை சார்ந்தே இருந்துள்ளது. கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் இருந்து முதல்வராக வந்தவர்கள். தற்போது ஜெயலலிதா மறைவாலும், கருணாநிதி வயது முதிர்வாலும் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் சினிமா பிரபலம் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழ்நிலையில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தங்களை அடையாளப்படுத்தி உள்ளனர்.
ரஜினிகாந்த், “நான் அரசியலுக்கு வந்தால் பணம் சேர்க்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்” என்றும், “நாட்டில் அமைப்பு கெட்டு கிடக்கிறது. ரசிகர்கள் போருக்கு தயாராக இருங்கள்” என்றும் அறைகூவல் விடுத்து தனது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அரசியலுக்கு வருவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து இரண்டு மாதங்கள் அரசியல் கட்சி நடத்தும் நடிகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் என்று பல்வேறு தரப்பினர்களிடம் ஆலோசனைகள் நடத்தி தற்போது அரசியலில் ஈடுபடும் இறுதி முடிவுக்கு வந்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கட்சி பெயர், கொடி, சின்னத்தை உருவாக்குவதிலும் கட்சியின் கொள்கை திட்டங்களை தயார் செய்வதிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளார். அப்போது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும், ரசிகர் மன்றம் உடனடியாக கட்சி அமைப்பாக மாற்றப்படும் என்றும் தகவல் கசிந்துள்ளது. டிசம்பர் 12-ந் தேதி தனது பிறந்த நாளையொட்டி மேலும் பல புதிய அரசியல் கொள்கை திட்ட அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
ரஜினிகாந்துக்கு போட்டியாக கமல்ஹாசனும் அரசியல் களத்தில் குதிக்க தயாராகி இருக்கிறார். சமீபகாலமாக அரசியல் விமர்சனங்களை கடுமையாக வெளியிட்டு ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார். அரசியலுக்கு வந்து விட்டேன். இனியும் முகமூடி போட்டுக்கொள்வதாக இல்லை. கோட்டையை நோக்கிய எனது பயணம் தொடங்கிவிட்டது என்றெல்லாம் அரசியல் பிரகடனத்தை வெளியிட்டு இருக்கிறார்.
கமல்ஹாசனும் புதிய கட்சி தொடங்குவது கட்சி பெயர், கொடி சின்னங்களை உருவாக்குவது போன்ற ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் வேலைகளும் புதிய உறுப்பினர் சேர்ப்பும் விறுவிறுப்பாக நடக்கிறது. தனது பிறந்த நாளையொட்டி நவம்பர் 7-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கமல்ஹாசன் சென்னையில் சந்திக்கிறார்.
அந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை பகிரங்கமாக அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பிரவேச அறிவிப்புகள் ஓரிரு மாதங்களில் வெளியாகி விடும் என்றும், அதன்பிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இன்னொருபுறம் ரஜினிகாந்தையும், கமல்ஹாசனையும் தங்கள் கட்சிகளில் இணைக்க சில அரசியல் தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள். ரஜினிகாந்தை பாரதீய ஜனதாவுக்கு அழைக்கும் முயற்சிகள் நடப்பதாகவும், அதற்கு அவர் உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர் நக்மா சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.
அப்போது காங்கிரஸ் கட்சியில் சேரும்படி கமல்ஹாசனிடம் வற்புறுத்தியதாக அந்த கட்சி வட்டாரத்தில் பேச்சு உள்ளது. இன்னொருபுறம் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் கட்சி தொடங்கும் பட்சத்தில் அவர்களுடன் கூட்டணி அமைப்பதற்காக சிறிய கட்சிகள் இப்போதே தூது அனுப்ப தொடங்கி உள்ளன.
தனித்தனி கட்சிகள் தொடங்கி எதிரெதிராக செயல்படுவதை தவிர்த்து ஒரே கட்சியில் இணைந்து செயல்படலாம் என்றும் சிலர் ஆலோசனை தெரிவித்து உள்ளனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் வருகையை எதிர்பார்த்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறி இருக்கிறது.