சென்னையில் 33 இடங்களில் போராட்டம் 199 பேர் மீது வழக்கு பதிவு
நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னை நகரில் 33 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னை,
நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னை நகரில் 33 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதில் 5 இடங்களில் நடந்த போராட்டங்களில் 11 பெண்கள் உள்பட 199 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு அவர்களை விடுதலை செய்தனர்.
இதேபோல் 28 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரம் பெண்கள் உள்பட 6,215 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.