இது விடை காணும் வேளை நீட் குறித்து கமல் ஹாசன் டுவிட்

நீட் தேர்வு பற்றி கருத்து தெரிவித்து உள்ள நடிகர் கமல் ஹாசன், இது விடை காணும் வேளையென குறிப்பிட்டு உள்ளார்.

Update: 2017-09-06 14:54 GMT


சென்னை,

 
 ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வலுவடைந்து உள்ளது. சென்னையில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் போராடி வரும் மாணவர்களின் போராட்டம் வலுவடைந்து உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் தன்னுடைய கருத்தை பதிவு செய்து உள்ள நடிகர் கமல் ஹாசன், “ நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் இது விடை காணும் வேளை. இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம். வெகுளாதீர். மதி நீதியையும் வெல்லும்,” என குறிப்பிட்டு உள்ளார். 

களம் இறங்கிவிட்டதை உணராத Tamil tweeters அனைவருக்ககும். இதுவும் களமே. பலகளம் பொருதும் மாமல்லரன்றோ நாம் எனவும் கூறிஉள்ளார். 
 

மேலும் செய்திகள்