தமிழ்நாடு அரசு பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நேற்று சென்னையில் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
சென்னை,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளர்களின் ஊதியக்குழுவின் வரம்புக்குள் கொண்டுவந்து நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கோரிக்கைகள் நிறைவேறாததால் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கோட்டை நோக்கி நேற்று முன்தினம் ஊர்வலமாக செல்ல முயன்று கைதானார்கள். நேற்று 2-வது நாளாக கோட்டை முன்பு மறியல் போராட்டம் நடத்த சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு அரசு பணியாளர்கள் கூடினர். போராட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் மு.கணேசன் தலைமை தாங்கினார்.
போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், மாநில சட்ட ஆலோசகர் கு.பால்பாண்டியன், மாநில தலைவர் பி.கே.சிவகுமார் ஆகியோர் கூறியதாவது:-
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் ஜெயலலிதா கூறியிருந்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் எந்த கணக்கில் இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. மேலும் ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் வறுமையில் வாடுகிறார்கள்.
பழைய ஓய்வூதியம் குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்களை தமிழக அரசு அழைத்து பேசியது. எங்களை அழைத்து பேசவில்லை. ஆனால் கோரிக்கைகள் நிறைவேறவில்லை. இதுகுறித்து தமிழக அரசின் அறிக்கை தெளிவாக இல்லை.
ரேஷன் கடை ஊழியர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஊழியர்கள், 2004-க்கு பிறகு சேர்ந்த அனைத்து துறை துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளையும் (வியாழக்கிழமை), நாளை மறுதினமும் (வெள்ளிக்கிழமை) வேலைநிறுத்தம் நடைபெறும். இரு நாட்களும் மாவட்ட தலைநகரங்களில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன்பிறகு 9-ந்தேதி திருச்சியில் கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பின்னர் கோட்டை முன்பு மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக செல்ல முயன்ற அரசு பணியாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 200 பேரை கைது செய்தனர்.