கரும்புக்கு கட்டுப்படியாகும் விலையை நிர்ணயிக்க வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் கரும்புக்கு நியாயமான கொள்முதல் விலை வழங்க தமிழக ஆட்சியாளர்கள் தவறியதன் பாதிப்புகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன.

Update: 2017-09-05 19:30 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் கரும்புக்கு நியாயமான கொள்முதல் விலை வழங்க தமிழக ஆட்சியாளர்கள் தவறியதன் பாதிப்புகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் கரும்பு ஒரே இடத்தில் பயிரிடப்படாமல் பரவலாக பயிரிடப்பட்டிருப்பதால் அனைத்து சர்க்கரை ஆலைகளுக்கு 34 நாட்களுக்காவது தடையின்றி கரும்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை. ஒருவேளை கரும்பு கிடைக்கவில்லையென்றால், ஆலைகளின் இயக்கம் தடைபடும். இல்லாவிட்டால் வரும் கரும்புக்கு ஏற்றவகையில் ஆலைகளின் அரவைத் திறனை தற்காலிகமாக குறைக்க வேண்டும். இந்த இரண்டில் எதைச் செய்தாலும் சர்க்கரை ஆலைகளுக்கு மிகவும் கடுமையான இழப்பு ஏற்படும்.

தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் கரும்புக்கு கட்டுப்படியாகும் விலை வழங்கப்படவில்லை. இன்றைய நிலையில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் ரூ.2850 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பல ஆலைகள் இந்த கொள்முதல் விலையைக் கூட உழவர்களுக்கு தருவதில்லை. இதுதவிர உழவர்களுக்கு தரவேண்டிய ரூ.2,000 கோடியை வழங்காமல் ஆலைகள் இழுத்தடிக்கின்றன. மேற்கண்ட காரணங்களால் தான் தமிழகத்தில் கரும்பு சாகுபடி குறைந்தது என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து கரும்புக்கு கட்டுப்படியாகும் விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்