நாகையில் மீனவர்கள் இடையே மோதல்; கடைகள் அடைப்பு சாலை மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது
நாகையில் மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. பதற்றம் நிலவியதால் கடைகள் அடைக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை அக்கரைப்பேட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய துறைமுக மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டது. இங்கு மீன் இறக்குவது தொடர்பாக 2 கிராம மீனவர்களிடையே கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுகுறித்து இந்த கிராமங்களில் அதிகாரிகள் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நாகை பழைய துறைமுகத்தில் மீன் இறக்குவதற்காக நம்பியார்நகர் மீனவர்கள் மீன் இறங்கு தளத்தை சுத்தம் செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கும், அக்கரைப்பேட்டை மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இது இரு கிராமங்களுக்கிடையே பெரும் மோதலாக மாறியதால் நம்பியார்நகரை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் பதற்றம் நிலவியதால் அந்த கிராமங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு நம்பியார்நகர் மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனை, பஸ் நிலையம், கோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தீர்வு கிடைக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறிய மீனவர்கள் விடிய, விடிய நேற்று காலை வரையிலும் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை மறியலில் ஈடுபட்ட 135 பெண்கள் உள்பட 509 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர். இந்த மோதல் சம்பவம் காரணமாக நாகையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
இதுதொடர்பாக இரு கிராமங்களையும் சேர்ந்த 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.