விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் நீக்கம் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
அ.தி.மு.க. (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை,
விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் ஆர்.பாலசுந்தரம் (மாவட்ட ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.