புளூவேல் கேமை பகிர்ந்து கொண்டால் கடும் தண்டனை வழங்க வேண்டும் - மதுரை ஐகோர்ட் உத்தரவு
புளூவேல் கேமை பகிர்ந்து கொண்டால் கடும் தண்டனை வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, “இணையதளத்தில் புளூவேல் எனப்படும் நீலத்திமிங்கல விளையாட்டு விளையாடி இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விளையாட்டுக்கு முழுமையாக தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்“ என்று முறையிட்டார். ஆனால் இந்த பிரச்சினை குறித்து ஐகோர்ட்டு தானாக முன்வந்து (சூ–மோட்டோ) விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் இதுதொடர்பான வழக்கை தாக்கல் செய்யுமாறும், அதை வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடுமாறும் ஐகோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில், மத்திய தகவல்–தொடர்புத் துறை செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை சைபர் கிரைம், சமூகநலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை இயக்குனர்கள், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து மனுத்தாக்கல் செய்யவும், இந்த வழக்கை வருகிற 4–ந்தேதி விசாரணைக்கு பட்டியலிடவும் மதுரை ஐகோர்ட்டு பதிவாளருக்கு உத்தரவிட்டது
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.நீல திமிங்கல விளையாட்டு விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.புளூவேல் கேமை பகிர்ந்து கொண்டால் கடும் தண்டனை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.ப்ளூவேல் கேமை ஷேர் இட், பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டால் கடும் தண்டனை என கூறி உள்ளது.