தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேருக்கு சபாநாயகர் மீண்டும் நோட்டீஸ்
முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற விவகாரத்தில், சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அ.தி.மு.க-வில், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்த உடன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக கடிதம் வழங்கிய அவர்கள், முதல்வர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்றவும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் தகுதிநீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு, அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருந்தார்.
இதைத்தொடந்து, கடந்த வாரம் சபாநாயகர் தனபால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிருந்தார். ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தனபால் கூறியிருந்தார். இதனிடையே, நேற்று முன் தினம் , தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் தனபாலைச் சந்தித்தனர்.
இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேருக்கு, சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் .செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முன்பு அளித்த விளக்கத்தை, இடைக்காலப் பதிவாக மட்டுமே கருத முடியும் என்று தனபால் கூறியுள்ளார்.