கூடங்குளத்தில் 2 அணு உலைகளும் இயங்காததால் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கூடங்குளத்தில் 2 அணு உலைகளும் இயங்காததால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியா உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2 அணு உலைகளின் மூலம் தமிழகத்துக்கு 1,125 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது.
முதல் அணு உலை மூலம் 14 ஆயிரத்து 146 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் வருடாந்திர பாரமரிப்பு பணிக்காகவும், எரிந்த எரிபொருட்களை அகற்றிவிட்டு புதிய செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் நிரப்புவதற்காகவும் பிப்ரவரி 13-ந் தேதி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. இந்த பணிகள் 65 நாட்களுக்குள் முடிவடைந்து மீண்டும் மின்சாரம் உற்பத்தி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதல் அணு உலையில் உள்ள முக்கியமான பகுதிகள், டர்பன் ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதுவரை முதல் அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
டர்பன் ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக 2-வது அணு உலையில் 4-ந் தேதி மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த பழுது சீரமைக்கும் பணியை ரஷிய நிறுவனம்தான் செய்யவேண்டும். ஆனால் தற்போது வரை ரஷிய நிறுவனத்தினர் கூடங்குளம் வரவில்லை. இதனால் பழுது சீரமைப்பது காலதாமதமாகி வருகிறது.
அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகளும் இயங்காததால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 1,125 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைக்கவில்லை. இதனால் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.