தமிழகத்துக்கு புதிய துணை முதல்-அமைச்சர் கிடைக்க வாய்ப்பு உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்துக்கு புதிய துணை முதல்-அமைச்சர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிஉள்ளார்.

Update: 2017-08-18 14:37 GMT


சென்னை,


அதிமுக அணிகள் இணைவது குறித்த அறிவிப்பை இரு அணியினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அறிவிப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்து உள்ள பேட்டியில், இரு அணிகள் இணைப்பு குறித்த நல்ல முடிவு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகும். கட்சியை வழிநடத்த வழிகாட்டும் குழு அமைக்கப்படலாம். தமிழகத்துக்கு புதிய துணை முதல்-அமைச்சர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூறிஉள்ளார். 

இரு அணிகள் இணைவதன் மூலம் எதிரிகள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள், இரு அணிகளும் இணைந்து 4 ஆண்டுகளுக்கு ஆட்சி சிறப்பாக நடைபெறும் என கூறிஉள்ளார் ராஜேந்திர பாலாஜி.

மேலும் செய்திகள்