2 நாட்களுக்கு வட மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் சென்னை வானிலை மையம்
அடுத்த 2 நாட்களுக்கு வட மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை
சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது-
தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு வட மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் .சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். ஆகஸ்டு மாதத்தில் பெய்துள்ள தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 33% அதிகம் .
தென்மேற்கு பருவ மழையானது தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஜுன் 1ந் தேதி முதல் ஆகஸ்ட் 17ந் தேதி (இன்று) வரை 21 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 33 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த 6 வருடங்களில் பெய்த அதிக பட்ச மழையாகும். இவ்வாறு அவர் கூறினார்.