எங்களை பகைத்துக் கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது - வெற்றிவேல் எம் எல் ஏ
எங்களை பகைத்துக் கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது என்று தினகரன் ஆதரவு அதிமுக பேரவை உறுப்பினர் வெற்றிவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலூர்
மூன்றாக பிரிந்திருக்கும் அதிமுகவின் தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் எம் எல் ஏ முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டுமானால் அவர்கள் அணியை பகைத்துக்கொள்ளக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்றுதான் நம்பிக்கை வாக்குக் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவளித்தோம். நாங்கள் நினைத்திருந்தால் ஓ பன்னீர் செல்வம் அணிக்கோ அல்லது திமுகவிற்கோ ஆதரவாக இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
தினகரன் கூட்டியுள்ள மேலூர் கூட்டத்திற்கு வரும் தொண்டர்களே உண்மையான அதிமுக தொண்டர்கள் என அவர் தெரிவித்தார்.