மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

Update: 2017-08-12 17:36 GMT
சென்னை, ஆக.13–

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. மாணவர்களின் எதிர்கால கல்வி கேள்விக்குரியாக அமைந்திருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவிகரமாக செயல்பட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் உறுதியான அறிவிப்பை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். அதற்கேற்ப தமிழக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத்தர உடனடியாக வற்புறுத்த வேண்டும்.

இனிமேலும் மத்திய அரசு இந்த பிரச்சினையில் மெத்தனப்போக்கை கடைப்பிடிக்காமல் தமிழக மாணவர்கள் நலன் கருதி இந்த வருட மருத்துவப்படிப்பில் சேர்வதில் நீட் தேர்வு முறை தடையாக இருக்கக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதோடு, மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் பயன் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தீர்க்கமான முடிவு செய்து மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுத்து மாணவர்கள் நலன் காக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்