கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் முதலமைச்சர் உள்ளிட்ட எவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் தினகரன் ஆவேசம்
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் முதலமைச்சர் உள்ளிட்ட எவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என தினகரன் கூறி உள்ளார்.
தஞ்சை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. அம்மா அணி அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டினார். கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது என ஈபிஎஸ் அணி தீர்மானம் நிறைவேற்றியது.
இதை தொடர்ந்து தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தீர்மானத்தில் அதிமுக எனக் குறிப்பிட்டுள்ளது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது. அதிமுக பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது . அதிமுக அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது தவறானது. தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால் இதில் கையெழுத்திட்டவர்கள் பதவி இழக்க நேரிடும். நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் பயந்து போய் உள்ளனர்
பொருளாளராக நியமிக்கபட்ட சீனிவாசன் தனது ஊதியத்தை பெற்று உள்ளார். நியமித்த திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக செயல்படும்போது, நான் ஏன் துணை பொதுச்செயலாளராக செயல்படக்கூடாது
ஜெயலலிதா இருந்த போதும் இது போல் நியமன பதவிகள் நியமிக்கபட்டு இருக்கின்றன. துணைபொதுச்செயலாளராக செயல்பட என்னை கட்சியின் சட்டதிட்டங்கள் அனுமதிக்கின்றன. புதிய பொறுப்பாளர்களை நியமிக்கவும் நீக்கவும் அதிகாரம் உள்ளது.கட்சி சட்டவிதிகளின்படி உள்ள அதிகாரத்தின் பேரிலேயே புதிய பொறுப்பாளர்களை நியமித்தேன்.கட்சி சட்டவிதிகளின்படி புதிய பொறுப்பாளர்களை நியமிக்க எனக்கு அதிகாரம் உள்ளது
அனைவரும் கையெழுத்திட்டு தான் பொதுச் செயலாளரை தேர்ந்து எடுத்தார்கள். சசிகலா கூறியதால் முதல்வராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி.
பதவியை காத்து கொள்ளவும் பயம் காரணமாகவும் சிலர் குழப்பம் விளைவித்தால் கட்சி பாதிக்காது. கட்சி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் செய்யப்படும். கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் முதலமைச்சர் உள்ளிட்ட எவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் . என்னை செயல்படவிடாமல் தடுக்க சசிகலாவால் மட்டுமே முடியும்.
தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளேன். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை.
கட்சியை பலப்படுத்த நான் நினைத்தால் அமைச்சர்கள் பதவிக்காக பயப்படுகிறார்கள். சசிகலா நியமனத்தை ஆதரித்து தற்போது மறுக்கும் 420க்களுக்கு எல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது. மடியில் கனம் இருப்பதால் சில அமைச்சர்கள் என்னை விலக்க திட்டமிட்டு உள்ளனர். பதவியில் இருக்கிற வரை சுருட்டிக்கொண்டு செல்வதில் தீர்க்கமாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியை உருவாக்கியவர்கள் சசிகலா அவர்கள். தவறான நடவடிக்கையால் சுய நலத்தால் இந்த ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடாது என்ற நல்ல எண்ணம் எனக்கு உள்ளது. யார் நல்லவர்கள் யார் நன்றி மறந்தவர்கள் என தொண்டர்களுக்கு தெரியும் வரும் பாராளுமன்ற தேர்தலில் அது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.