பெண் பத்திரிகையாளர் குறித்து ஆபாச கருத்து நடிகர் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு

பெண் பத்திரிகையாளர் குறித்து சமூக வலைதளத்தில் ஆபாச கருத்து பதிவு செய்த நடிகர் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2017-08-09 07:23 GMT
சென்னை,

பெங்களூருவில் வசிப்பவர் தன்யா ராஜேந்திரன் இவர் இணையதள பத்திரிகை ஒன்றில் ஆசிரியராக உள்ளார். நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகர் விஜய் நடித்துள்ள சுறா படத்தை பார்த்தபோது, நான் இடைவேளையில் வெளியே வந்துவிட்டேன் என்றும் சமீபத்தில் ஷாருக்கான் நடித்துள்ள இந்தி படத்தை பார்த்தபோது இடைவேளை வரை கூட பார்க்க முடியவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் எனது கருத்தை பதிவு செய்திருந்தேன்.

இதையொட்டி விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பேர் எனது புகைப்படத்துடன் ஆபாச தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கு காரணமான குறிப்பிட்ட 5 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளேன். இதுபோன்ற செயலுக்காக நடிகர் விஜய்யும் உரிய அறிவிப்பு வெளியிட்டு அவரது ரசிகர்கள் என்று சொல்பவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும். என்று கூறினார்.

தன்யா   கொடுத்த புகார் மனு தொடர்பாக ‘சைபர் கிரைம்’ போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விஜய் ரசிகர்கள் தம்மிடம் தவறாக பேசுவதாக பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்