5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு மு.க.ஸ்டாலின் அறிக்கை
தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெங்குவின் பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது, என்ற உண்மைத்தகவலை டெல்லியில் பேட்டியளித்த தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. யாரும் பீதியடைய வேண்டியதில்லை, என்று சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அளித்த வாக்குறுதி பொய்யென இப்போது சுகாதாரத்துறை செயலாளரின் பேட்டி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றும், 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியான தி.மு.க. எச்சரிக்கை மணி அடித்தாலும், ஊழல் மயக்கத்தில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் காதில் விழவில்லை. அந்த அமைச்சரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கவலைப்படவில்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் வினியோகித்தற்கான பட்டியலை வருமான வரித்துறை கைப்பற்றிய அன்றே அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அடுத்து மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை தாராளமாக விற்பனை செய்ய அனுமதிக்க 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் என்று புகார் வந்த போதாவது அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி விலக முதல்-அமைச்சர் கூறியிருக்க வேண்டும்.
மாநில அரசுக்கே 245 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் விதத்தில் அனுமதிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு கற்களை வெட்டி எடுத்த குவாரி ஊழலை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்த அன்றே அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்.
மத்திய-மாநில அரசுகளுக்கு ஏறக்குறைய 495 கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தி விட்டதாக வருமான வரித்துறையால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரை டெல்லிக்கு அனுப்புகிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஊழல் புகார் மலையில் உட்கார்ந்திருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரால் சுகாதாரத்துறையை முழுநேரப் பணியாக கவனிக்க முடியவில்லை. அவர் ஒரு பகுதி நேர அமைச்சர் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் இனம் புரியாத காய்ச்சலால் பலியாவதை தடுக்க இயலவில்லை. டெங்கு காய்ச்சலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் இன்றைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோவை, சேலம் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் டெங்கு பீதியடைந்திருக்கிறார்கள். ஊழல் அமைச்சர் விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறை ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டது.
இந்தநிலையில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பிற்காக அனுமதிக்கப்பட்டவர்களை விட தனியார் மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஆகவே, இனியும் வேடிக்கைப் பார்க்காமல் சுகாதாரத்துறைக்கு முழு நேர அமைச்சர் ஒருவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நியமிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகளையும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே முன்னின்று எடுத்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, டெங்கு பாதிப்பை முற்றிலும் நீக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.