தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது
மறைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் ரூ.78 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
தி.மு.க. முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகன், சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார். இவர் மீது ரூ.78 கோடி அன்னிய செலாவணி மோசடி புகாரில் அமலாக்கப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் இரவு மணி அன்பழகனை அவரது வீட்டில் வைத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். உடனடியாக அவர் இரவோடு இரவாக கோர்ட்டு உத்தரவு அடிப்படையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் சென்னை மண்ணடியைச் சேர்ந்த லியாகத் அலி என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கைது செய்தனர். அவர் வெளிநாடுகளில் இருந்து ரூ.78 கோடி அளவுக்கு எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக, போலி பில்களை தயாரித்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு வங்கிக்கு கணக்கு காட்டி, அதற்கான ரூ.78 கோடி பணத்தை வங்கி மூலம் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது, ஹவாலா பண பரிமாற்றத்தை போலி பில்கள் அடிப்படையில் வங்கி மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது அன்னிய செலாவணி மோசடி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையொட்டியே லியாகத் அலி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கப்பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகனுக்கும் தொடர்பு இருப்பது உறுதியானது. சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு வங்கியில் 8 கணக்குகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் ரூ.78 கோடி பணமும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடான பணபரிவர்த்தனை மணி அன்பழகன் மூலமாகவே நடந்ததாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பிட்ட அந்த வங்கியின் கேமராக்களை ஆய்வு செய்தபோது, காமிராவில் பதிவான காட்சிகளில் மணி அன்பழகன் அடிக்கடி அந்த வங்கிக்கு சென்று வந்ததை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் அடிப்படையில், மணி அன்பழகன் கைது செய்யப்பட்டதாக அமலாக்கப்பிரிவினர் தெரிவித்தனர்.
ரூ.78 கோடி முறைகேடான பணப்பரிமாற்றத்தில் வேறு யாராவது முக்கியப்புள்ளிக்கு தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது. இதற்கிடையில் மேற்கண்ட 8 வங்கி கணக்குகளிலும் மேலும் ரூ.20 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்த பணத்தை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.
இந்த மோசடி பிரச்சினையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தான், முதன் முதலில் கடந்த மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் வழக்கு அடிப்படையில் தான் அமலாக்கப்பிரிவினர் மேல் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.