ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்த காதல் ஜோடிகள்

சென்னையில் காதல் ஜோடிகள் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Update: 2017-08-08 07:29 GMT
சென்னை மடிப்பாக்கம் செந்தூரர் காலனி 3வது தெருவை சேர்ந்தவர் முருகன் (49), ரயில்வே அதிகாரி. இவரது மனைவி லட்சுமி (45), தலைமை செயலகத்தில் அதிகாரியாக உள்ளார்.

இவர்களது மகள் சங்கீர்த்தனா(17) கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார், இவர் ரவி (24) என்ற ஆட்டோ ஓட்டுநரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் விவகாரம், பெற்றோர்களுக்கு தெரிந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சங்கீர்த்தனா தனது காதலனுடன் சேர்ந்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூக்கில் தொங்கிய சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்