ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை பதில் இல்லை; ஓ.பி.எஸ். பேச்சு

ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை பதில் இல்லை என ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Update: 2017-08-06 14:46 GMT
சிவகாசி,

சிவகாசியில் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி பொது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை பதில் இல்லை என கூறினார்.

தொடர்ந்து அவர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்க ஆந்திரா சென்று கோரிக்கை வைத்தேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்