டி.டி.வி.தினகரன் அறிவித்த புதிய பதவி சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஏற்க மறுப்பு
அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், நேற்று புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார்.
பண்ருட்டி,
அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், நேற்று புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார். அதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வமும் ஒருவர். அவருக்கு மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் அந்த பதவியை சத்யா பன்னீர்செல்வம் ஏற்க மறுத்துவிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் என்னை மாநில மகளிர் அணி இணைச் செயலாளராக டி.டி.வி.தினகரன் அறிவித்து இருப்பது தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே இந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் எனது கட்சிப்பணி தொடரும்” என்று கூறி இருக்கிறார்.