அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டுள்ளது மு.க.ஸ்டாலின்
நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அகற்றப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி: நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது குறித்து தி.மு.க.வின் கருத்து என்ன?
பதில்: தலைவர் கருணாநிதியால் வைக்கப்பட்ட சிலை அது. அதனால் அரசியல் காழ்ப்புணர்வோடு, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த சிலையை அங்கிருந்து எப்படியாவது அகற்றிட வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்து அந்த முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். நியாயமாக, இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு நீதிமன்றத்தில் முறையாக வாதாடி நிச்சயமாக சிலையை அகற்ற முடியாத நிலையை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், வேண்டும் என்றே திட்டமிட்டு, சிவாஜி கணேசனுடைய புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவருடைய சிலை அகற்றப்பட்டிருக்கிறது என்பது தான் எங்களுடைய கருத்து.
கேள்வி: வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டுகிறீர்கள். அவரோ, என்னை அரசியலில் இருந்து அகற்றும் எண்ணம் நிறைவேறாது என்று அறிக்கை விட்டிருக்கிறாரே?
பதில்: அவருக்கு நாங்கள் அரசியல் நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. அதற்கு நாங்கள் தயாராகவும் இல்லை. டாக்டர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு புகார்கள் உள்ளது. ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் பணம் விளையாடியது தொடர்பாக 89 கோடி ரூபாய்க்கான ஆவணம் வருமான வரித்துறையிடம் சிக்கியது.
அதன்பிறகு, குட்கா போதை பொருள் விற்பனை செய்வதற்கு அவருக்கு லஞ்சம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது வருமான வரித்துறையின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. இப்போது அவரது சொத்துகள் முடக்கப்பட்டிருக்கிறது. பினாமி பெயரில் இருக்கும் சொத்துகள் கூட முடக்கப்பட்டிருக்கின்றன என்று செய்திகள் வந்துக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த நிலையில் அவர் அப்பழுக்கற்றவராக இருப்பது உண்மை என்று சொன்னால், தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்த வழக்கை அவர் சந்திக்க வேண்டும். தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு மீண்டும் அந்த பொறுப்பில் வந்து உட்கார வேண்டும். அதுதான் அவருக்கு அழகு. அதை தான் நான் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன்.
கேள்வி: அ.தி.மு.க. அணி ஒரே அணியாக இருந்தபோது அதில் இருந்து, இப்போது 2–வது அணியாக பிரிந்துவிட்ட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் அரசு ‘ஊழல் அரசு’ என்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அதற்கு சட்டத்துறை அமைச்சர் சண்முகம் நல்ல தெளிவாக பதிலளித்து இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் அணியை ஊழல் அணி என்றும், ‘மணல் மாபியா’ சேகர் ரெட்டியுடன் இணைந்து கொள்ளையடித்தவர் என்றும் கூறியிருக்கிறார். ஆக, ஒற்றுமையாக இருந்தபோதே இந்த ஆட்சி எந்த அளவிற்கு கொள்ளையடித்திருக்கிறது, ஊழல் செய்திருக்கிறது என்று இதிலிருந்தே தெரிகிறது. நடிகர் கமல்ஹாசன் சொன்னது ‘நூற்றுக்கு நூறு’ உண்மை என்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.
கேள்வி: முரசொலி ‘பவள விழா’ ஏற்பாடுகள் எந்தளவில் இருக்கிறது. தலைவர் கருணாநிதி இவ்விழாவில் பங்கேற்பாரா?
பதில்: விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. பவள விழாவை பொறுத்தவரையில் டாக்டர்கள் ஆணைப்படி தலைவர் கருணாநிதி பங்கேற்கும் வாய்ப்பு இல்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.