களத்தில் குதித்தார் டிடிவி தினகரன் அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார்
அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை டிடிவி தினகரன் அறிவித்தார்.
சென்னை,
அ.தி.மு.க. அம்மா அணி யில் உள்ள 122 எம்.எல்.ஏ.க் களில் பெரும்பாலானவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், 37 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரன் தலைமையிலும் செயல்பட்டு வருகிறார்கள்.
கட்சியையும், ஆட்சியையும் யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது என்பதில் இவர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
எடப்பாடிக்கும் தினகரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பலப்பரீட்சையால் அ.தி.மு.க. அம்மா அணியில் பரபரப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணி அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலஞ்சர் துரை, முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.பி.ஆதித்தன், சாருபாலா தொண்டைமான், காமராஜ், மாணிக்கராஜா, டி.கே.எம்.சின்னையா,கே.டி.பச்சைமால்,ஜி.செந்தமிழன்,ஆர்.மனோகரன். எஸ்.டி.ஜக்கையன்,மேலூர் ஆர்.சாமி,சி.சன்முகவேலு, மாதவரம் மூர்த்தி அமைப்பு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் தலைவராக கே.கே.சிவசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரிவு இணைசெயலாளர்களாக தங்கதுரை, திருப்பூர் சிவசாமி, கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக நாஞ்சில் சம்பத், இளவரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இணைச்செயலாளர்கள் நடராஜன், ராதாகிருஷ்ணன், சுகுமார் பாபு, நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமைப்பு செயலாளர்களாக செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், கு.ப.கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.