6 ஐம்பொன் சிலைகள் திருட்டு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையினர் மீது வழக்கு
அறநிலையத்துறை இணை கமிஷனர் உள்ளிட்ட 10 ஊழியர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை,
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் 6 ஐம்பொன்சிலைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அறநிலையத்துறை இணை கமிஷனர் உள்ளிட்ட 10 ஊழியர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர், திருமலைத்தெருவை சேர்ந்தவர் வெங்கடராமன். இவர் சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் மற்றும் திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிலை திருட்டு தொடர்பாக புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இவர் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர் கிராமம் எனது சொந்த ஊராகும். பந்தநல்லூரில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சோழமன்னர்களால் கட்டப்பட்ட அருள்மிகு பசுபதீஸ்வரர் சிவன் கோவிலும், ஆதிகேசவபெருமாள் கோவிலும் உள்ளது. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. பசுபதீஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான நிலங்கள் இருக்கிறது. ஏராளமான தங்கம், வைர நகைகளும் உள்ளன.
அந்த கோவிலில் விலை மதிக்க முடியாத ஏராளமான ஐம்பொன் சாமி சிலைகளும், கற்களால் வடிவமைக்கப்பட்ட சாமி சிலைகளும் உள்ளன. இந்த கோவிலுக்கு சொந்தமாக கோவிலின் கட்டுப்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட கிராம கோவில்களும் இருக்கிறது.
இந்த கோவிலுக்கு சொந்தமான ஐம்பொன் சாமி சிலைகளை பாதுகாப்பு கருதி பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள உலோகத்திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஐம்பொன்சிலைகளை உலோகத்திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்கவில்லை. முறையாக பதிவு செய்யவும் இல்லை.
இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு மேற்கண்ட கோவில்களுக்கு செயல் அதிகாரியாக பதவி ஏற்ற காமராஜ், திருக்கோவில் சொத்துகளையும், ஐம்பொன் சாமி சிலைகளையும் கணக்கு எடுத்து பார்த்தார்.
அப்போது கீழமனக்குடி அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான விநாயகர், புஷ்பகரணி, வள்ளி, தெய்வானை, சந்திரசேகர அம்மன் மற்றும் ரங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான விநாயகர் சிலை போன்ற 6 ஐம்பொன்சிலைகள் திருட்டுப்போனது கண்டறியப்பட்டது. ஆனால், செயல் அதிகாரி காமராஜ் இந்த சிலைகள் திருட்டுப்போனது குறித்து இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
திருட்டு சம்பவத்தை மூடி மறைத்துவிட்டார். சிலைகள் எல்லாம் சரியாக இருப்பதாக தவறான தகவலை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு சான்றிதழாக அனுப்பிவிட்டார். மேலும் இந்த திருட்டு தொடர்பாக செயல் அதிகாரி காமராஜ் போலீசிலும் புகார் கொடுக்கவில்லை.
அப்போது மயிலாடுதுறை இந்து அறநிலையத்துறை இணை கமிஷனராக இருந்த கஜேந்திரன், கும்பகோணம் உதவி கமிஷனராக இருந்த ஞானசேகரன் ஆகியோருக்கு சிலைகள் திருட்டுப்போனது பற்றி நன்கு தெரியும். ஆனாலும், அவர்களும் இதை கண்டுகொள்ளாமல் உண்மைகளை மூடி மறைத்துவிட்டனர்.
எனவே, சிலை திருட்டை மூடி மறைத்த இணை கமிஷனர் கஜேந்திரன், உதவி கமிஷனர் ஞானசேகரன், செயல் அதிகாரி காமராஜ், பசுபதீஸ்வரர் கோவில் தலைமை எழுத்தர் ராஜா, கோவில் அறங்காவலர்கள் பசுபதிபிள்ளை, மனோகரபிள்ளை, முன்னாள் செயல் அலுவலர் ராமச்சந்திரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சரணவன், ஜெகதீஸ் குருக்கள், முன்னாள் கோவில் குருக்கள் சேகர் ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சென்னை கிண்டி சிலை கடத்தல் மற்றும் திருட்டு தடுப்புபிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் இந்து சமய அறநிலையத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை இந்து சமய அறநிலையத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.