சென்னையை கலக்கிய டெல்லி கொள்ளையர்கள் 2 பேர் கைது
விமானத்தில் பறந்து வந்து சென்னையில் பெண்களிடம் தொடர்ந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை நகரில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை அவ்வப்போது போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தாலும், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அதை முழுமையாக தடுக்க முடியவில்லை.
கடந்த திங்கட்கிழமை திருமங்கலம், அண்ணாநகர், டி.பி.சத்திரம், வேப்பேரி மற்றும் மயிலாப்பூர் ஆகிய இடங்களில், 6 பெண்களிடம் தொடர்ச்சியாக சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்தன. ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்களின் உருவம் அந்தந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.
அதில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவத்தை கடந்த வாரம் வெளியிட்ட போலீசார், அவர்களை பற்றி துப்புக்கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தனர்.
கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிளின் நம்பரை வைத்து அவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். 4 தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த மோட்டார் சைக்கிள் சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு லாட்ஜில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த தனிப்படை போலீசார், அதே லாட்ஜில் தங்கி இருந்த 2 கொள்ளையர்களையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் டெல்லியை சேர்ந்த சஞ்சய் (வயது 32), சந்தீப் (38) என்று தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கைது செய்யப்பட்டுள்ள 2 பேரோடு சேர்த்து மேலும் 8 பேர் அடங்கிய கும்பல் விமானத்தில் அடிக்கடி சென்னைக்கு பறந்து வந்து லாட்ஜில் தங்கி இருந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். 4 பேர் வீதம் மாறி, மாறி சென்னை வந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் ஒரே லாட்ஜில் அறை எடுத்து தங்காமல், பெரியமேடு, யானைகவுனி பகுதியில் வெவ்வேறு லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
தற்போது பிடிபட்டுள்ள சந்தீப், சஞ்சய் ஆகியோருடன் மேலும் 2 பேர் தங்கி இருந்தனர். ஆனால், அவர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட சென்றதால் போலீசில் சிக்கவில்லை. அவர்களையும், டெல்லியில் இருக்கும் இந்த கும்பலை சேர்ந்த 6 பேரையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களை அடிக்கடி மாற்றி வந்ததால், கொள்ளையர்களை பிடிப்பதில் போலீசார் பெரும் சவாலை சந்தித்தனர். தொடர்ந்து சந்தீப், சஞ்சய் ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது.
வடமாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்கள் இதேபோல் சென்னைக்கு வந்து பெண்களிடம் நகையை பறித்துவிட்டு தப்பிச்சென்று விடுவதால், அவர்களை ‘என்கவுண்ட்டர்’ முறையில் சுட்டுத்தள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
ஏற்கனவே இதுபோல் சென்னையில் உள்ள வங்கிகளில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து வந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்களை போலீசார் ‘என்கவுண்ட்டரில்’ சுட்டு வீழ்த்தினர். அதன்பிறகு வங்கிகளில் கொள்ளை சம்பவம் நடப்பது தடுக்கப்பட்டது.
இதேபோல ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவாரியா கும்பல் என்று அழைக்கப்படும் கொடூர கொள்ளையர்களையும் போலீசார் சுட்டு வீழ்த்தினார்கள். அதன் பிறகு வடமாநில கொள்ளையர்களின் வால் ஒட்ட நறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.