வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி படத்துக்கு சான்றிதழ் தர மறுப்பதா? டைரக்டர் ஆவேச பேட்டி

ராகேஷ் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2017-08-02 21:30 GMT
சென்னை,

‘‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் துருவா கதாநாயகனாகவும் ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். ராகேஷ் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டது. வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் தணிக்கை சான்று வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு டைரக்டர் ராகேஷ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:–

‘‘இன்றைய சமூகத்தில் நடக்கும் சிறு சிறு குற்றங்களைத்தான் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்ற பெயரில் படமாக்கி உள்ளோம். பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. அவை சமூக வலைத்தளங்களில் வெளியாகிறது. அப்போதெல்லாம் தணிக்கை குழு தலையிடுவது இல்லை.

அதையே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த படமாக எடுத்தால் தணிக்கை குழு எதிர்க்கிறது. எனது படத்துக்கு ஏ அல்லது யுஏ சான்றிதழ் தரும்படி கேட்டும் மறுத்து விட்டனர். மேல் முறையீட்டு குழுவுக்கு செல்லும்படி கூறிவிட்டனர். தணிக்கை குழு நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.’’

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்