புதிய விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
பொது வினியோக திட்டம் திரும்ப பெற வேண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
பொது வினியோக திட்டத்தை நிலைகுலைய வைக்கும் புதிய விதிமுறைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான நிபந்தனைகள் அடங்கிய வரைமுறைகளை வகுத்து, அரசிதழில் வெளியிட்டுள்ள ‘குதிரை பேர’ அ.தி.மு.க. அரசு, பொது வினியோக திட்டத்தில் மிக மோசமான குளறுபடிகளை உருவாக்கியிருக்கிறது. ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், கடந்த 1.11.2016 அன்று அமல்படுத்திய அ.தி.மு.க. அரசு, ‘நகர்ப்பகுதிகளில் 37.79 சதவீதம், கிராமப்பகுதிகளில் 62.55 சதவீதம் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் பொது வினியோக திட்டத்தை செயல்படுத்த முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற பயனாளிகளை கண்டறிவோம்’ என்று அப்போதே மத்திய அரசிடம் ஒப்புக்கொண்டு விட்டது.
அந்த அடிப்படையில் இப்போது குடும்ப அட்டைகள் யாருக்கு உண்டு, யாருக்கெல்லாம் இல்லை என்ற கணக்கெடுக்கும் பணிக்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வரையறுக்கப்பட்ட அரிசியின் அளவினை வழங்கும் அதே நேரத்தில், ஏற்கனவே குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வந்த அரிசியின் அளவினை குறைக்காமலும், அனைவருக்குமான பொது வினியோக திட்டத்தின் தன்மை மாறாமலும் விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று அரசு அளித்த வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாக இந்த கணக்கெடுப்பு விதிமுறைகள் அமைந்திருக்கின்றன.
ஏழை–எளிய மக்கள் வயிற்றில் அடிக்கும் இந்த மாபாதக செயலுக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது அரசு வெளியிட்டுள்ள இந்த புதிய அரசிதழ் அறிவிப்பின்படி, வீட்டில் ஒருவர் வருமான வரி செலுத்தினால் அந்த குடும்பத்திற்கு குடும்ப அட்டை இல்லை. அதேபோல், அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், வீட்டில் ஏ.சி. வைத்திருப்பவர்கள் போன்றோருக்கும் இனி குடும்ப அட்டை இல்லை. எல்லாவற்றையும் விட கொடுமையானது வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் பெறுவோருக்கு இனி குடும்ப அட்டை இல்லை.
அதாவது, மாதம் ரூ.8 ஆயிரத்து 334 சம்பளம் வாங்குபவர் இனி குடும்ப அட்டையை பெறவும், பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகிய அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்குமான வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது.
குடும்ப அட்டைகளை குறைத்து, பொது வினியோக திட்டத்தின் கீழ் பயனாளிகளையும் குறைத்து, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் மதிப்பீட்டின்படி, பொது வினியோக திட்டத்தை சீர்குலைக்க இந்த அரசு தீவிரமாக செயல்படுவது வேதனையளிக்கிறது. அதற்காகத்தான் இந்த புதிய அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு பொருள் குறித்து அரசிதழில் ஆணை வெளிவந்துவிட்டால், அதுவே இறுதியானது. அதை செயல்படுத்தாமல் இருக்க முடியாது. செயல்படுத்தாத விதிமுறையை அரசிதழில் வெளியிட வேண்டிய அவசியமில்லை.
ஆனால் குடும்ப அட்டை பெறுவதற்கான இந்த புதிய விதிகள் வகுக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிட்டு விட்டு, அந்த விதிகள் கடைப்பிடிக்கப்படாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்திருப்பது நடப்பது ஆட்சியல்ல, ‘துக்ளக் தர்பார்’ என்றே நினைக்கத்தோன்றுகிறது. ஏற்கனவே போலியான குடும்ப அட்டைகளை நீக்குகிறோம், ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று கூறி, குடும்ப அட்டைகளை முடக்கி வைத்து, அந்த அட்டைகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவது மனிதாபிமானமற்ற முறையில் நிறுத்தப்பட்டுள்ளது.
‘ஸ்மார்ட் கார்டு’ கொடுக்கப்போகிறோம் என்று அறிவித்து, அதுவும் கிடப்பில் போடப்பட்டு, ஆயிரக்கணக்கான குடும்ப அட்டைகள் முடக்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காமல் தாய்மார்கள் எல்லாம் இன்றைக்கு வீதிக்கு வந்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், குடும்ப அட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் பொது வினியோக திட்டத்தை முழுமையாக சீரழித்து, கிராம மக்களுக்கும், ஏன் நகர்ப்புறத்தில் உள்ள மக்களுக்குமே கூட மோசமான பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது.
தமிழகத்தின் பொது வினியோக திட்டம் மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி நடந்தால், பல ஏழை குடும்பங்கள், நடுத்தர மக்கள், நகர்ப்புறத்தில் உள்ள ஏழை மக்கள் அனைவரும் அரிசி வாங்க முடியாத நிலை ஏற்படும்.
வெளி மார்க்கெட்டுகளில் அரிசி விலை கடுமையாக அதிகரித்து வருகின்ற நிலையில், அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பேரிடியாக மாறியுள்ளது. மொத்தமுள்ள 1.95 லட்சம் குடும்ப அட்டைகள் இந்த புதிய அறிவிப்பின்படி கணக்கெடுக்கப்படும்போது அதிரடியாக குறைந்து, ஏழை–எளிய மக்கள் பொது வினியோக திட்டத்தில் இருந்து அடியோடு விடுவிக்கப்படும் ஆபத்து உருவாகப்போகிறது. அதற்கான திரைமறைவு திட்டத்துடன்தான் இந்த புதிய விதிமுறைகளை அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
ஆகவே, பொது வினியோக திட்டத்தை நிலைகுலைய வைக்கும் வகையிலான புதிய விதிமுறைகள் அடங்கிய அரசிதழை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டாலும், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொது வினியோக திட்டம் தொடரும் என்று சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்றவாறு, இப்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை எக்காரணத்தை கொண்டும் குறைக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.