அ.தி.மு.க. இரு அணிகள் இணைய வேண்டும் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேட்டி

அ.தி.மு.க. இரு அணிகள் இணைய வேண்டும் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறியுள்ளார்.

Update: 2017-07-31 22:15 GMT
சென்னை,

சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். எவ்வளவு விரைவாக இரண்டு அணிகளும் இணைகிறார்களோ? அந்த அளவுக்கு தமிழகத்துக்கு நல்லது. எங்கள் அணியின் நிபந்தனைகளை ஏற்கும்வரை இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்புகள் இல்லை.

உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இல்லை என்றால் அதனை நடத்த நாங்கள் அழுத்தம் கொடுப்போம். தேர்தலின் மூலம் கட்சியிலும், மக்கள் மத்தியிலும் அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா) அணிக்கு உள்ள பலத்தை நிரூபிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்