சசிகலா வீடியோ பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் செய்யப்பட்டது புகழேந்தி சொல்கிறார்

சசிகலா குறித்து வெளியான வீடியோ மற்ரும் புகைப்படம் பாகுபலியை மிஞ்சும் வகையில் கிராபிக்ஸ் செய்யப்பட்டது என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறி உள்ளார்.

Update: 2017-07-18 11:24 GMT

பெங்களூர்

கர்நாடக  அ.தி.மு.க ( அம்மா ) அணி பொது செயலாளர் புகழேந்தி சென்னை அடையாறில் உள்ள தினகரனை சந்தித்து பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சசிகலா பற்றி குற்றச்சாட்டுக்களை முன் வைத்த டிஐஜி ரூபாவைப் பற்றி பரபரப்புக் புகார் கூறினார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தனது துறை ரீதியான பிரச்சினையிலிருந்து தப்பிக்க சசிகலா பெயரை ரூபா பயன்படுத்தியுள்ளார். அவர் தனக்கு அளிக்கப்பட்ட 2 மெமோக்களில் இருந்து தப்பிக்கவே சசிகலாவின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்.

சசிகலா பயன்படுத்தியதாக சமூகவலைத்தளத்தில் வெளியான அறையின் புகைப்படங்கள் பொய்யானது. அது பாகுபலி கிராபிக்ஸை மிஞ்சும் வகையில் கிராபிக்ஸ் செய்யப்பட்டு உள்ளது.

சட்டப்படி சிறையில் என்ன கொடுக்கப்பட்டுள்ளதோ அது தவிர சசிகலாவிற்கு கூடுதலாக ஒன்றும் கொடுக்கப்படவில்லை. அப்புறம் எப்படி அவர் அங்கு சமைக்க முடியும். நியாயம் இல்லாமல், இதயம் இல்லாமல் இப்படி பேசுகிறார்கள்.

சசிகலா 20 ஆண்டுகள் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார். 63 வயதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரால் நிறைய சாப்பிட முடியாது. அவர் கொஞ்சம் தான் சாப்பிடுவார். இவரைப் பற்றி தொடர்ந்து பேசுவதை நிறுத்த வேண்டும்.

சசிகலா தொடர்பான வீடியோவை கொண்டு வாருங்கள். அதனைப் பொய் என்பதை நான் நிரூபிக்கின்றேன். அந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று எனக்கு தெரிய வேண்டும். பரப்பன அக்ரஹாரா சிறை 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த இடத்தில் எப்படி வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரிய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்