தமிழக விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா? அமைச்சர் தகவல்

சட்டசபையில் தமிழகத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் கீழ் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பேசினார்.

Update: 2017-07-14 19:00 GMT
சென்னை,

சட்டசபையில் தமிழகத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் கீழ் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பேசினார். அப்போது அவர், விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:–

பெரும் மழை வந்தபோதும், வார்தா போன்ற புயல் வந்தபோதும் விவசாயிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்தது. போதிய அளவு நிவாரணமும் வழங்கியது. கடந்த 6 ஆண்டுகளில் 28 ஆயிரத்து 163 கோடியே 32 லட்ச ரூபாய் அளவிற்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. வடக்கிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் நிலவரி முழுவதும் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய 7 சதவீத வட்டியினை அரசே ஏற்று கடந்த 6 ஆண்டுகளில் ரூ.983.72 கோடியை வட்டி மானியமாக வழங்கியது. எனவே தமிழகத்தில் அனைத்து விவசாயிகள் கடன்களை தற்போது தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்