நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ கலந்தாய்வு: மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

Update: 2017-07-09 22:39 GMT

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவர் மாணவர் சேர்க்கை இடங்களுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றி இருப்பதால், ஏழை–ஊரக மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை உருவாகி உள்ளது.

இந்தநிலையை மாற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட வேண்டும்.

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே நிகர்நிலைப் பல்கலைகழகங்களுக்கும் பொருந்தும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் தான் அனைத்து தரப்பினரையும் மருத்துவர்களாக முடியும் என்பதால் தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்