தந்தை, சகோதரர் மீது பாலியல் புகார் கொடுத்த மாணவி

ஒழுக்கமாக இருக்கும்படி கூறியதால் தந்தை, சகோதரர் மீது மாணவி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

Update: 2017-07-08 22:45 GMT

சென்னை,

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது தந்தையும், சகோதரரும் தான் குளிக்கும்போது படம் பிடித்ததாக ரெட்டியார் பாளையம் போலீசில் கடந்த ஆண்டு புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் தந்தை-மகன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார்

போலீஸ் விசாரணையில், குழந்தைகளுக்கான அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் தான், அந்த புகாரை மாணவிக்கு எழுதிக் கொடுத்தது தெரியவந்தது.

இதை அறிக்கையாக போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதைதொடர்ந்து மாணவியின் தந்தைக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவியின் தந்தை, சகோதரர் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

பின்விளைவுகள் எதுவும் தெரியாமல் மாணவி தனது தந்தை, சகோதரர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். புகாரை அவர் எழுதவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குழந்தைகளுக்கான அமைப்பில் பணியாற்றும் பெண் எழுதி கொடுத்த புகாரை அப்படியே காப்பியடித்து மாணவி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது தந்தை, சகோதரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்