திருப்பூர் அருகே கண்டெய்னரில் கைப்பற்றப்பட்ட பணம் ரூ 570 கோடி வங்கி பணமே சி.பி.ஐ. அறிக்கை
திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியில் கைப்பற்றப்பட்ட பணம் ரூ 570 கோடி வங்கி பணமே ஐகோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது.
சென்னை
தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் 16–ந் தேதி தேர்தல் நடந்தது. ஓட்டுப்பதிவு நடைபெறுவதற்கு 3 நாட்கள் முன்பாக, அதாவது 13–ந் தேதி திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட ரூ.570 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பரபரப்பு
இந்த பணம் கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து அதன் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கிளைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
தேர்தல் நேரத்தில் ரூ.570 கோடி பணம் பிடிபட்டதால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியது. இதுபற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசியல் கட்சிகள் வைத்தன.
முதலில் இந்த பணத்தை எடுத்துச் சென்றவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறப்பட்டது. பின்னர், இந்த பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் காட்டப்பட்டதால், ரூ.570 கோடி கோவை பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டு ரிசர்வ் வங்கியின் கணக்கில் சேர்க்கப்பட்டது.
தி.மு.க. வழக்கு
தேர்தல் முடிவடைந்த பிறகும் 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் குறித்த சர்ச்சை நீடித்தது. இந்த பணம் யாருடையது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரி தி.மு.க. செய்தி தொடர்புத்துறை செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்தார். அவருடைய புகாரை சி.பி.ஐ. ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து, இந்த பணம் யாருடையது? யாருக்காக எங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது? என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் டி.கே.எஸ்.இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார்.
அதில் இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய அளவில் ‘ஹவாலா’ பணம் புழக்கத்திற்காக கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் எனவும் கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.சுப்பையா, ‘‘ரூ.570 கோடி பிடிபட்ட விவகாரத்தில் மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ. முதல் கட்ட விசாரணை நடத்தி அந்த விசாரணையில் ஏதேனும் முகாந்திரம் இருப்பது தெரியவந்தால் சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’’ என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதற்கிடையே சி.பி.ஐ. இயக்குனரை டெல்லியில் நேரில் சந்தித்து மேலும் ரூ.570 கோடி பணம் தொடர்பாக பல சந்தேகங்கள் அடங்கிய கடிதம் ஒன்றையும் டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்தார்.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதன் அடிப்படையில் ரூ.570 கோடி எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக தனது முதல் கட்ட விசாரணையை சி.பி.ஐ. தீவிரமாக மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பில் வழக்கு பதிவும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் சிபிஐ விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் திருப்பூர் அருகே கண்டெய்னரில் கைபற்ற பட்ட பணம் ரூ 570 கோடி வங்கி பணமே என கூறி உள்ளது.