மாட்டு இறைச்சி விவகாரத்தில் இளைஞர்கள் துன்புறுத்தப்படுவதை மத்திய அரசு தடுக்கவேண்டும் ஜவாஹிருல்லா

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஈரோடு மாவட்டம் கோபியில் சமூக நல்லிணக்க விழா நடைபெற்றது.

Update: 2017-07-02 18:19 GMT
ஈரோடு

இதில் கலந்துகொள்வதற்காக கோபி வந்த கட்சியின் மாநில தலைவர் டாக்டர் என்.எச்.ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மாட்டு இறைச்சி விவகாரத்தில் இளைஞர்களை துன்புறுத்தப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். தாரமங்கலத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. உடனே தமிழக அரசு தலையிட்டு எரிவாயு கசிவை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்