ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ராம்நாத் முதல் அமைச்சர் பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோரினார்
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாரதீய ஜனதா கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று சந்தித்து ஆதரவு கோரினார்.
சென்னை,
பாரதீய ஜனதா கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளவர் ராம்நாத் கோவிந்த். இவர் தேர்தலில் தனக்கு ஆதரவு தர கோரி சென்னை வந்துள்ளார்.
அவர், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோரினார். அதன்பின்னர், சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு கோரும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அம்மா அணியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.