சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Update: 2017-06-16 14:18 GMT
சென்னை,

கடந்த மாதம் (மே) 30–ந்தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கேரளா, கடலோர கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் சில இடங்களில் மழை பெய்துள்ளது. தற்போது தெலுங்கானா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது.

நேற்றுமுன்தினம் தெலுங்கானா முதல் குமரிக்கடல் பகுதி இடையே ராயலசீமா மற்றும் உள்தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில் தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் சென்னையில் சென்னை மெரீனா, எழும்பூர்,நுங்கம்பாக்கம்,கோயம்பேடு,ஈக்காட்டுத்தாங்கல்,கிண்டி,அசோக்நகர், தியாகராயநகர், கோடம்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம்தாம்பரம்,வண்டலூர்,பூந்தமல்லி,ஆவடி, வேளச்சேரி,  ஆதம்பாக்கம்,  உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்