விவசாயிகள் நலனை பாதுகாக்க பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணியை பா.ம.க. முறியடிக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
விவசாயிகள் நலனை பாதுகாக்க பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணியை பா.ம.க. முறியடிக்கும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பாலாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணையை கட்டும் பணிகளில் ஆந்திர அரசு ஈடுபட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆந்திராவில் ஒட்டுமொத்த பாலாற்றையும் அணையாக மாற்றவும் அம்மாநில அரசு திட்டமிட்டு இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
கடந்த 33 நாட்களாக இந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
சட்ட விரோதம்
பாலாற்றை பயன்படுத்தி ஆந்திரத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றும் அதே நேரத்தில், தமிழகத்தை வறண்ட பாலைவனமாக மாற்றும் நோக்கத்துடன் தான் ஆந்திர அரசு இவ்வாறு செய்கிறது.
பாலாற்று நீரை பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்துக்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892–ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளை கட்டக்கூடாது என்று தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளை கட்டுவதும், ஏற்கனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதம் ஆகும். இதை அனுமதிக்க கூடாது.
பா.ம.க. முறியடிக்கும்
பாலாறு மாநிலங்களிடையே பாயும் ஆறு என்பதால் இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, பாலாற்றில் தட்டுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதை செய்ய மத்திய, மாநில அரசுகள் தவறினால் விவசாயிகளில் நலனை பாதுகாப்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று பணிகளை பா.ம.க. முறியடிக்கும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., கூறியுள்ளார்.